ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

vazhappazha tholuritthu

வாழைப்பழ தோலுரித்து...

காதுல நுழையிற மாதிரி பேருனா அது குச்சி. வாயில நுழையிற மாதிரினா அது வாழப்பழந்தாங்கா  . வாழப்பழத்துல அப்படி என்ன இருக்குனுதானே நினைக்கிருங்க. அதுல நிறைய இருக்குங்க.

எங்க ஊர் வாத்தியாரு ஒருத்தர் வாழப்பழ தோல்ல வழுக்கி செத்துப்போனாருங்க.  அதுக்கு அப்புறம் அவர் மனைவிக்கு, வாழப்பழம்னா உயிர், அதையே சாமியா கும்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

வாழப்பழத்த ரொம்ப நாள் வச்சிருந்தா, தோல்லேலம் கருப்பு கருப்பா  புள்ளி வரும் ஏன்னா வாழப்பழத்துல இரும்பு சத்து நிறையா இருக்குலே, அதனாலே துருப்பிடிக்குதுங்க.

வாழப்பழத்த சாப்பிட்டா, இரத்தத்துல இரும்பு சத்து கூடுங்க. இரும்பு சத்து குறைவா இருக்குறத கண்டு பிடிக்க ஒரு நல்ல வழி இருக்குங்க. காந்ததுக்கு பக்கத்துல போயி நில்லுங்க, அது உங்கள இழுக்கலேனா, உங்களுக்கு இரும்பு சத்து இல்லேங்க.

வாழப்பழத்துல ஊசி குத்துற மாதிரி, நைசா சொல்லிட்டுப்போறான் பாருன்னு சொல்லுவோம், ஆனா, தூங்கறதுக்கு முன்னாலே வாழப்பழம் சாப்பிட்டு பாருங்க, முக்கலோ, முனங்கலோ இல்லாம காலைக் கடனை அடைக்கலாங்க.

வாழப்பழத்துல நிறைய பொட்டாசியம் இருக்குங்க. அது இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, இதயத்தை பாதுகாகுதுங்க. ஆனா "என் இதயந்தான் எதிர் வீட்டுக்காரிகிட்ட இருக்குதுன்னு சொல்லுரீங்களா". சத்தமா  சொல்லாதீங்க, அவ புருசனுக்கு காதுல 
காதுல விழுந்தா இதான் சாக்குன்னு,  கூட்டியாந்து விட்டுரப்போறான்.

வாழைப்பழத்தின் இன்னொரு முக்கியமான பயன் என்னன்னா,
காத்து குத்தும்போது பிள்ளை அழுதா, உரிச்ச பழத்த உள்ள வைத்து அழுத்துங்க பேச்சு மூச்சு எல்லாம் 
மொத்தமா நின்னு போயிடும். 

முக்கனிய ஒரு கனி வாழைப்பழங்க, சீப்பா கிடைச்ச வாங்கி 
தினம் ஒரு பழம் சாப்புடுங்க, உங்களுக்கு இந்த மூச்சி திணறல் வர்றதெல்லாம் 
நின்னு போயிடும். விலையைக் கேட்டாத்தான் திணறலே வருதுங்கிரின்களா. 

ஓடாத் தேஞ்சி போயிருந்த எங்க கொத்தனாரு மாமாவுக்கு 
வாழப்பழம் எலும்புக்கு நல்லதுன்னு சொன்னதுதாங்க தாமதம்,
 பழத்த தின்னு  இரண்டே மாதத்துல எலும்பு நல்ல முறுக்கேற, இப்ப என்னடானா 
சித்தளோட சுத்திக்கித்து திரியிறாரு.

வாழப்பழத்த வாங்கிகிட்டு கோயிலுக்கு போனா,
வாழ்க்கை எல்லாம் பழந்தாங்க.

 வெள்ளி, 1 ஏப்ரல், 2011

inji iduppukku azhagu

இஞ்சி தின்னா குடும்பமே நல்லாயிருக்கும்


அட ஆமாங்க. இஞ்சி வயித்த சுத்தமா வச்சிருக்க உதவுதுங்க. வயிறு சரியில்லேனா வாயு தொல்லே, வாயுக்கு குடும்பத்தையே கலைக்கும் சக்தி இருக்குங்க. அதனாலதான் இஞ்சி தின்னா குடும்பமே நல்லாயிருக்குமுன்னு சொன்னேன்.  என் சித்தப்பா  ஒருத்தரு இஞ்சி தின்னா குரங்கு மாதிரியே இருப்பாரு, பின்னாடிதான் தெரிஞ்சிச்சி அவர் பொண்டாட்டி  கடிச்சி வச்சிடுச்சாம். பச்ச இஞ்சத்தின்னா பல்லு இளிசசிகிடுங்க அதனாலதான் இஞ்சி தின்னா குரங்கு மாதிரின்னு சொல்லுறாங்க. காலையில எழுந்தவுடனே யாருங்க வீட்டுல டி குடிக்கிறா, உயிருக்கு பயந்து எல்லாரும் டி கடைக்குத்தானே ஓடுறோம். டி குடுச்ச்சவுடனே சிலருக்குப் போகும், இல்லேன்னு வைச்சிக்கங்களேன். சும்மா போட்டு முக்காம, முதல் நாள் சாயும்காலமோ, ரத்திரிக்கோ இஞ்சிக் டி இல்லனா இஞ்சி  காபி குடிங்க, காலையில சும்மா வழ வழ... கொழ கொழன்னு போயி வயிறு சுத்தமாயிரும்.

இஞ்சி வயித்துக்கு ரொம்ப நல்லதுங்க. அதுனலதாங்க "இஞ்சி இடுப்பழகி" இன்னு சொல்லுறாங்க. அதாங்க வயிறு சுத்தமாகிட்டா, இடுப்பு சும்மா சிக்குன்னு ஆயிடுங்க.

பல பேரு பல்ல காலையிலும் மாலையிலும் வெளக்கினாலும், வாடை பக்கத்தில நிக்க முடியாது. பெரும்பாலும் வாயில கோளாறு இல்லங்க, அது வயித்துல. மூடிய எவ்வளவு நல்லா கழுவுனாலும், கீழ இறங்கி சாக்கடைய சுத்தம் பண்ணலேனா, வாட எப்படிங்க போகும். அது மாதிரித்தான், வயிறு சுத்தமா இல்லேனா, வாயி நாறத்தான் செய்யும்.  எங்க ஊர்ல மாணிக்கம்...மாணிக்கம் என்று ரெண்டு பேரு இருக்காங்க, சொல்லி வச்ச மாதிரி, ரெண்டு பெரும் வாயத் திறந்தா, ஊரே நாறிப்போகும். அப்படி ஒரு வாட. அதாங்க இந்த இஞ்சி சாறு, இஞ்சி டி, இஞ்சி காபி, இஞ்சி தொவையல், கொழம்புல இஞ்சினு தினமும் சாப்பிட்டால், வயிறும் சுத்தமாகும், வையும் மணக்கும்.

இஞ்சி தொண்டைக்கு நல்லதுங்க. அதுக்காக மொத்த இஞ்சையும் முழுங்கேராதீங்க, அரைச்ச இஞ்சில கொஞ்சம் தேன் கலந்து சாப்பிட்ட, இரத்த ஓட்டம் சீராகும். அத விடுங்க, பச்ச தண்ணியில ஒரு சின்ன துண்டு இஞ்ச போட்டு தினமும் கொடுச்சாலே போதுங்க, உங்க வயிறு பெருக்காதுங்க . வாயும் வயிறுமா இருக்கிற என் போலீஸ் மாமாவுக்கு என்வளவோ சொன்னாலும், கேக்க மாட்டேங்கிராருங்க.

இஞ்சி எண்ணெய் இன்னும் நல்லதுங்க. வலி வந்த இடத்துல தடவுங்க, நல்லது. அதுக்காக அடிக்கிற உங்க பொண்டாட்டி கையில இல்லங்க. அட அடி வாங்குன இடத்துல தடவுங்க. என் கையில காயத்துக்கும், என் பொண்டாட்டிக்கும் எந்த சம்மந்தமும் இல்லங்க. இது விளையாடும் பொது பட்ட அடிங்க. அப்புறம் எதுக்கு கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போனேன்னு கேக்காதிங்க, நீங்க போயி இஞ்சி சாப்பிடுங்க.

Karumbu thinna Koolikidaikkum

பாட்டி வைத்தியம்
1 கரும்பு

பொங்கல்னா கரும்பு, பிணம்னா என் மச்சான் தாங்க. ஏன்னா அவனைப் பார்த்தாலே பிணம் மாதிரியே இருப்பாங்க. அதை விடுங்க. கரும்ப பத்தி இன்னக்கி பேசுவோம். என் தம்பி ஒருத்தன் எச்சி கையிலே காக்கா விரட்டமாடாங்க, அதுக்காகவே கரண்டில சாப்பிடுறான். யாருக்கும் கொடுக்காம தின்னுட்டு மிச்ச்சகரும்ப கையிலே புடுச்சிக்கிட்டே இராத்திரிலே படுத்திருந்தாங்க, விடுஞ்சி பார்த்தா, கரும்பு இருக்கு அவன் கையக் கானாங்க. எறும்பு தூக்கிகிட்டு போயிடுச்சி. (கரும்ப விட எறும்புக்கு அவன் கையி இனிப்பா இருந்திருக்குன பார்த்துகங்க)
எல்லாத்துலேயும் கலப்படங்க, கரும்பு கூட இனிக்கிறது இல்ல.

பொங்கலுக்கு கரும்ப கடிச்சி பல்லு போன என் தம்பி, இப்பவெல்லாம் வாய திறக்கிறதில்ல. கரும்பு கம்பு மாதிரி இருந்தா என்னக பண்ணுறது. அடிக் கரும்பு நல்லா இன்னிக்கும்னு சொல்லுவாங்க, ஆனா, எங்க அப்பாவுக்கு அடிக் கரும்ப வச்சி எங்கள அடிக்கிறது நல்லா இனிக்கும்.
என் நண்பன் கரும்பு சாற்ற தலையில தடவ, எறும்பு ஏறி மண்ணைத் தோண்ட ஆரம்பிச்சிடுச்சினா பார்த்துகோங்க. நாம்ப சின்னப் பிள்ளையா இருக்கும்போது அப்பா அம்மா மண்ணுல விளையாடதே மண்ணுல விளையாடதேனு சொல்லுறது இதுக்குத்தாங்க, மண்ணு தலைக்குள்ள போயி, மூளையில உக்காந்துக்கிரும்.

கரும்புள என்ன வைதியமிருக்குனு கேப்பிங்க. இருக்குங்க, நிறையா இருக்கு. கரும்பு சாற்றை, எலும்மிச்ச சாற்றோட கலந்து குடிச்சா, மயக்கம், தலை சுற்றல் உடனே நிற்கும். கரும்போட விலைதான் தலை சுற்றளுக்கே
காரன்னு சொல்லுறது புரியுர்துங்க. கரும்பு சாற்றுள  சக்கரை இருக்கிறதாலே, பெண்கள் சக்கரை வியாதியுள்ள மாமியாருக்கு தினமும் காலையில ஒரு ரெண்டு டம்ளர் கொடுத்தா, ஒரு வாரத்துல பலன் தெரியும்.
கரும்பு சாறு தசைகளை வலுவாகுதுங்க. தினமும் காலையில ஒரு டம்ளர் குடிச்சா, கண், இதயம், கிட்னி மற்றும் மூளைக்கு ரொம்ப நல்லது.
மஞ்ச காமாலைக்கு எலுமிசசையோடு கலந்த கரும்பு சாறு ரொம்ப நல்லதுங்க.
சின்ன பயலுக சும்மா சும்மா அழுதுக்கிட்டிருந்தா, ஒரு பெரிய கரும்ப கையில கொடுங்க, அழுகையையும் நிறுத்தலாம், பல்லும் வலிமையாகும்.

மொத்ததுல கரும்புகிறது இனிப்பாத விசயன் தாங்க.