ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

vazhappazha tholuritthu

வாழைப்பழ தோலுரித்து...

காதுல நுழையிற மாதிரி பேருனா அது குச்சி. வாயில நுழையிற மாதிரினா அது வாழப்பழந்தாங்கா  . வாழப்பழத்துல அப்படி என்ன இருக்குனுதானே நினைக்கிருங்க. அதுல நிறைய இருக்குங்க.

எங்க ஊர் வாத்தியாரு ஒருத்தர் வாழப்பழ தோல்ல வழுக்கி செத்துப்போனாருங்க.  அதுக்கு அப்புறம் அவர் மனைவிக்கு, வாழப்பழம்னா உயிர், அதையே சாமியா கும்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

வாழப்பழத்த ரொம்ப நாள் வச்சிருந்தா, தோல்லேலம் கருப்பு கருப்பா  புள்ளி வரும் ஏன்னா வாழப்பழத்துல இரும்பு சத்து நிறையா இருக்குலே, அதனாலே துருப்பிடிக்குதுங்க.

வாழப்பழத்த சாப்பிட்டா, இரத்தத்துல இரும்பு சத்து கூடுங்க. இரும்பு சத்து குறைவா இருக்குறத கண்டு பிடிக்க ஒரு நல்ல வழி இருக்குங்க. காந்ததுக்கு பக்கத்துல போயி நில்லுங்க, அது உங்கள இழுக்கலேனா, உங்களுக்கு இரும்பு சத்து இல்லேங்க.

வாழப்பழத்துல ஊசி குத்துற மாதிரி, நைசா சொல்லிட்டுப்போறான் பாருன்னு சொல்லுவோம், ஆனா, தூங்கறதுக்கு முன்னாலே வாழப்பழம் சாப்பிட்டு பாருங்க, முக்கலோ, முனங்கலோ இல்லாம காலைக் கடனை அடைக்கலாங்க.

வாழப்பழத்துல நிறைய பொட்டாசியம் இருக்குங்க. அது இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, இதயத்தை பாதுகாகுதுங்க. ஆனா "என் இதயந்தான் எதிர் வீட்டுக்காரிகிட்ட இருக்குதுன்னு சொல்லுரீங்களா". சத்தமா  சொல்லாதீங்க, அவ புருசனுக்கு காதுல 
காதுல விழுந்தா இதான் சாக்குன்னு,  கூட்டியாந்து விட்டுரப்போறான்.

வாழைப்பழத்தின் இன்னொரு முக்கியமான பயன் என்னன்னா,
காத்து குத்தும்போது பிள்ளை அழுதா, உரிச்ச பழத்த உள்ள வைத்து அழுத்துங்க பேச்சு மூச்சு எல்லாம் 
மொத்தமா நின்னு போயிடும். 

முக்கனிய ஒரு கனி வாழைப்பழங்க, சீப்பா கிடைச்ச வாங்கி 
தினம் ஒரு பழம் சாப்புடுங்க, உங்களுக்கு இந்த மூச்சி திணறல் வர்றதெல்லாம் 
நின்னு போயிடும். விலையைக் கேட்டாத்தான் திணறலே வருதுங்கிரின்களா. 

ஓடாத் தேஞ்சி போயிருந்த எங்க கொத்தனாரு மாமாவுக்கு 
வாழப்பழம் எலும்புக்கு நல்லதுன்னு சொன்னதுதாங்க தாமதம்,
 பழத்த தின்னு  இரண்டே மாதத்துல எலும்பு நல்ல முறுக்கேற, இப்ப என்னடானா 
சித்தளோட சுத்திக்கித்து திரியிறாரு.

வாழப்பழத்த வாங்கிகிட்டு கோயிலுக்கு போனா,
வாழ்க்கை எல்லாம் பழந்தாங்க.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக